Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 14 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், தனது மகளை தனக்கு அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தென்கொரியாவின் புலனாய்வு முகவரகம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கான செப்டெம்பர் விஜயம் போன்றான உயர் மட்ட நிகழ்வுகளில் அண்மைய மாதங்களில் தனது தந்தையுடன் 13 வயதானவரென நம்பப்படும் கின் ஜூ ஐ காணப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கான ஜூ ஐயின் முதல் பயணமாக பெய்ஜிங்குக்கான இப்பயணம் காணப்படுகின்றது.
கிம் ஜொங் உன், அவரது மனைவி றி சோல் ஜூவின் அறியப்பட்ட ஒரே குழந்தையாக ஜூ ஐ காணப்படுகின்றார். கிம் ஜொங் உன் சிரேஷ்ட புதல்வரைக் கொண்டிருப்பதாக புலனாய்வு முகவரகம் நம்புகின்றது. ஆனால் மகன் இருப்பதாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையென்பதுடன், வட கொரிய ஊடகங்களிலும் காண்பிக்கப்படவில்லை.
ஜூ ஐ இருப்பதே ஐக்கிய அமெரிக்காவின் கூடைப்பந்தாட்ட வீரரான டெனிஸ் றொட்மனின் வடகொரிய விஜயத்தின்போது அவரை றொட்மன் தூக்கி வைத்திருந்ததாக றொட்மன் தெரிவித்ததைத் தொடர்ந்தே வெளிவந்திருந்தது.
முதன்முறையாக 2022ஆம் ஆண்டு ஜூ ஐ வெளிப்படுத்தப்பட்டிருந்தார்.
21 minute ago
37 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
49 minute ago
52 minute ago