Freelancer / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த, ரஷ்ய அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில், புட்டின், செவ்வாய்க்கிழமை (19) கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது. எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்த சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago