2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; அரச அதிகாரிகள் கார் வாங்கத் தடை

Ilango Bharathy   / 2022 ஜூன் 12 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாக பாகிஸ்தான்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து  வருகின்றது. 
குறிப்பாக பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன்  உதவி வழங்குமாறு கோரி வருகின்றது. 
இந்நிலையில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 2022-ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தை  வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கருத்துத் தெரிவிக்ககையில் நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக  ”பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்தவும், அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்கவும்  தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X