2025 நவம்பர் 05, புதன்கிழமை

அதிகாலை ஐந்து மணிக்கு வாக்குப் பதிவு: தேர்தல் ஆணைக்குழுவை முடிவெடுக்குமாறு உத்தரவு

Editorial   / 2019 மே 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக வெயில், ரமழான் நோன்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி, அடுத்து வரும் மூன்று கட்ட இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பையும் அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த மனுவை பரிசீலனை செய்து உரிய முடிவை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவை உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது.

வழக்கறிஞர்களான நிஜாமுதீன் பாஷா, ஆசாத் ஹயாத் ஆகியோர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தன. அவர்கள் அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,

“இம்மாதம் ஆறாம் திகதி, 12ஆம் திகதி, 19ஆம் திகதிகளில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம், ஆறாம், ஏழாம் கட்ட வாக்களிப்பை காலை ஏழு மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக இரண்டு மணித்தியாலம் அல்லது இரண்டரை மணித்தியாலம் முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதாவது, அதிகாலை நாலரை மணிக்கு அல்லது ஐந்து மணிக்கு வாக்களிப்பை தொடங்கலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் கொடுமையால் வெப்ப அலைகள் ஏற்படுகின்றன. இதனால் வெயிலில் நின்று வாக்களிக்க மக்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், புனித ரமழான் மாதமும் தொடங்குவதால் வாக்களிப்பை காலை ஐந்து மணிக்குத் தொடங்க வேண்டும்.

எங்கள் கோரிக்கையை நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் மனுவாக கடந்த திங்கட்கிழமை தெரிவித்தும் எவ்விதமான பதிலுமில்லை. ஆகையால், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டு, வாக்களிப்பை அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X