2025 மே 16, வெள்ளிக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜப்பான்; கொண்டாட்டத்தில் இளைஞர்கள்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் கொரோனாத்  தொற்றுக்குப்  பின்னர் குழந்தைகளின்  பிறப்பு விகிதமானது வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

 இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக அந்நாட்டு அரசு புதிய முடிவொன்றை எடுத்துள்ளது.

அந்தவகையில் இளைய தலைமுறையினரின் வருமானத்தை அதிகரிப்பதற்காகப்  பொருளாதாரம் மற்றும் சமூகத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இவ்வாறு செய்வதனால் குறைந்த ஊதியம் பெரும் இளைஞர்களும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப்  பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இவ்அறிவிப்பானது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .