2026 மே 09, சனிக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘மைக்ரோசொஃப்ட்‘ நிறுவனம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 06 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீது ரஷ்யா  கடந்த 24ஆம் திகதியிலிருந்து  தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரேனும்  ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப  நிறுவனமான  மைக்ரோசொப்ட்“  ரஷ்யா மீதான தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத்  தெரிவித்துள்ளது.

அத்துடன் உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் இணைய தாக்குதலுக்கு எதிராக தாங்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அப்பிள்  நிறுவனமும் ரஷ்யாவில் தமது சேவையை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .