2026 மே 09, சனிக்கிழமை

அப்பாவிப் பொதுமக்களைக் கொல்கின்றோம்; கதறி அழுத ரஷ்ய இராணுவ வீரர்

Ilango Bharathy   / 2022 மார்ச் 03 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 8ஆவது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல் உக்ரேனும்  தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர்இழப்புக்களும்,பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ”தாம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருவதாக”  உக்ரேன் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம்  வாக்குமூலம் வழங்கிய வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 குறித்த வீடியோவில் ” அமைதியாக வாழும் மக்கள் மீது தாம்  தாக்குதல் நடத்துவதாகவும், ரஷ்ய பீரங்கிகளுக்குத்  தாம் தீவனமாக மாறி விட்டதாகவும், தாக்குதலில் உயிரிழந்த சக வீரர்களின் சடலங்களைக் கூட தாம் எடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐ.நா சபையில் நேற்று முன்தினம்(03) ‘உக்ரேனிலிருந்து  ரஷ்யப் படைகள் உடனடியாக  வெளியேற வேண்டும் ‘ என்ற தீர்மானத்திற்காக, வாக்கெடுப்பு நடைபெற்றது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா சபையில்  இத் தீர்மானத்திற்கு சார்பாக  141 நாடுகளும் எதிராக 5 நாடுகள் வாக்களித்துள்ளன.

எனினும் இலங்கை, இந்தியா உட்பட 35 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உக்ரேன் நாட்டிலிருந்து, ரஷ்ய படைகள் உடனே வெளியேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .