2026 ஜனவரி 07, புதன்கிழமை

அமெரிக்க தாக்குதலில், கியூபா அதிகாரிகள் 32 பேர் உயிரிழப்பு

Janu   / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்​கை​யின் ​போது தங்​களது நாட்​டைச் சேர்ந்த 32 அதிகாரி​கள் கொல்​லப்​பட்​டுள்ள​தாக கியூபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் “வெனிசுலா அரசாங்​கத்​தின் கோரிக்​கை​யின் பேரில் கியூ​பா​வின் ராணுவ மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் பல ஆண்​டு​களாக அங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.இந்த நிலை​யில் வெனிசுலாவை சுற்​றிவளைத்து அமெரிக்கா நடத்​திய திடீர் தாக்​குதலில் 32 கியூபா அதி​காரி​கள் உயி​ரிழந்​தனர்” என  தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன் விமானத்​தில் புளோரி​டா​விலிருந்து வாஷிங்​ட​னுக்கு ஞாயிற்​றுக்​கிழமை பயணம் செய்த போது செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “நேற்று (சனிக்​கிழமை) கியூபா மற்​றும் வெனிசுலாவைச் சேர்ந்த நிறைய பேர் கொல்​லப்​பட்​டனர் என்​பது உங்​களுக்கு தெரி​யும். ஆனால், எங்​கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்​லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .