2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

அமெரிக்கருக்கு யூரல் பைக்கை பரிசளித்த புட்டின்

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது.

ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது. கடந்த 1867-ம் ஆண்​டில் ரஷ்​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி நடை​பெற்​ற​போது அலாஸ்கா பகுதி அமெரிக்​கா​வுக்கு ரூ.45 கோடிக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இன்​றள​வும் அலாஸ்கா முழு​வதும் ரஷ்ய கலாச்​சா​ரம் நிறைந்​திருக்​கிறது.

கடந்த 15-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்​பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் இராணுவ தளத்​தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்ய ஜனாதிபதி புட்டின், அமெரிக்​கா​வின் அலாஸ்​காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்​சம் மதிப்​புள்ள யூரல் பைக்கை பரி​சாக வழங்​கி​னார்.

இதுகுறித்து மார்க் வாரன் கூறிய​தாவது: அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படை​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றேன். ரஷ்ய தயாரிப்​பான யூரல் பைக்​கின் தீவிர ரசிக​னான நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்​தேன்.

ஜனாதிபதி புட்டினின் வரு​கைக்​காக ரஷ்ய ஊடகங்​களின் செய்​தி​யாளர்​கள், ஆங்​கரேஜ் நகரில் முகாமிட்​டிருந்​தனர். யூரல் பைக்​கில் சென்ற என்​னிடம் அவர்​கள் பேட்டி எடுத்​தனர். அப்​போது யூரல் பைக்​கின் உதிரி பாகங்​கள் கிடைப்​ப​தில் சிரமம் இருப்​ப​தாக ரஷ்ய செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தேன்.

என்​னுடைய பேட்டி ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் கவனத்​துக்கு சென்​றிருக்​கிறது. அவர் எனக்கு புதிய யூரல் பைக்கை பரி​சாக வழங்கி உள்​ளார். சில நாட்​களுக்கு முன்பு ஆங்​கரேஜ் நகரில் ரஷ்ய அதி​காரி​கள், என்​னிடம் புதிய யூரல் பைக்கை வழங்​கினர். அதற்​காக ஒரு பைசாவை​கூட பெற​வில்​லை. இது எனக்கு இன்ப அதிர்ச்​சி​யாக இருக்​கிறது. இவ்​வாறு மார்க் வாரன் தெரி​வித்​தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X