Freelancer / 2026 மார்ச் 06 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும் கடந்த 1965-ம் ஆண்டில் ‘மினிட்மேன் II’ ஏவுகணையும் அமெரிக்க விமானப் படையில் சேர்க்கப்பட்டன. கடந்த 1970-ம் ஆண்டில் ‘மினிட்மேன் III’ ஏவுகணை விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
தற்போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவுகணைகள் அமெரிக்காவின் மோன்டானா, நார்த் டகோடா, வயோமிங் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. ‘மினிட்மேன் III’ ஏவுகணையின் திறன் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அதிவேகத்தில், அதிக தொலைவு சீறிப் பாயும் ‘மினிட்மேன் III’ ஏவுகணையின் சோதனை மார்ச் 3-ம் தேதி இரவு 11.01 மணிக்கு (பசிபிக் நேரம்) நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் வாண்டன்பெர்க் விண்வெளி படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட ஏவுகணை, மார்ஷல் தீவுகளுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த 2 இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது. ‘மினிட்மேன் III’ ஏவுகணை மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த ஏவுகணை முதலில் விண்வெளியின் வளிமண்டலத்தை தாண்டிச் செல்லும். பின்னர் விண்வெளியில் இருந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து தரையில் உள்ள இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். 36,000 கிலோ எடை, 59.5 அடி நீளம், 5.5 அடி விட்டம் கொண்ட ஒரு ஏவுகணையில் 3 அணு குண்டுகள் வரை சுமந்து செல்ல முடியும்.
இந்த ஏவுகணை மணிக்கு 24,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். சுமார் 13,000 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். ‘மினிட்மேன் III’ ஏவுகணை மூலம் உலகின் எந்த பகுதியையும் 30 நிமிடங்களில் தாக்கி அழிக்க முடியும். இவ்வாறு அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. (a)

9 minute ago
15 minute ago
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
16 minute ago
26 minute ago