2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

S.Renuka   / 2025 ஜூலை 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் இலங்கை நேரப்படி, இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை 3.58 மணிக்கு  ஏற்பட்டுள்ளது.

பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.

இதனால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .