Freelancer / 2026 ஜனவரி 16 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கிலுள்ள முக்கிய தளங்களில் இருந்து அமெரிக்கா தனது பணியாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி போன்ற நாடுகளிடம் ஈரான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்கா தமது மண்ணைப் பயன்படுத்தி ஈரானைத் தாக்கினால், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
45 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
7 hours ago
16 Jan 2026