2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக …

Ilango Bharathy   / 2022 ஜனவரி 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான மாயா ஏஞ்சலோவின்  உருவமே இவ்வாறு நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் அதுசார்ந்த தாக்கம் குறித்தும் விரிவாக பதிவு செய்திருந்தார்.

இதனால் குறித்த புத்தகமானது அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு, தனது 86ஆவது வயதில் அவர் காலமானார்.

இந்நிலையில், மாயா ஏஞ்சலோ நினைவாக,அமெரிக்காவில்  நாணயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .