Editorial / 2019 மே 02 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணுவாயுதவழிப்பு பேச்சுக்களில் இவ்வாண்டு இறுதிக்குள், ஐக்கிய அமெரிக்கா புதிய நிலையை வழங்காவிட்டால், ஐக்கிய அமெரிக்கா விரும்பத்தகா விளைவுகளை எதிர்கொள்கும் என வடகொரியாவின் உப வெளிநாட்டமைச்சர் சோ சண் ஹுய், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளதாக வடகொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ கூறியுள்ளது.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான தனது இரண்டாவது சந்திப்பானது, பொருளாதாரத் தடைகள் மீட்புக்கு பதிலாக வடகொரியாவின் அணுத் திட்டத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மேலதிக நெகிழ்வுத் தன்மையை ஐக்கிய அமெரிக்கா காண்பிப்பதற்காக இவ்வாண்டு இறுதி கால எல்லையொன்றை வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் நிர்ணயித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி ட்ரம்பும், ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மைக் பொம்பயோவும் குறித்த காலக்கெடுவை நிராகரித்ததுடன், தலைவர் கிம் உறுதியளித்த அணுவாயுதமழிப்பில் நடவடிக்கை எடுக்குமாறு அவரைக் கோரியுள்ளனர்.
இந்நிலையில், சி.பி.எஸ்ஸுடனான மைக் பொம்பயோவின் கடந்த வார நேர்காணலொன்றில் அவர் தெரிவித்த பேரம்பேசல்கள் முறிவடைந்தால், ஐக்கிய அமெரிக்கா பாதைகளை மாற்ற வேண்டி வரும் என்பதைக் குறிப்பிட்ட சோ சண் ஹுய், பாதைகளை மாற்றுவது ஐக்கிய அமெரிக்கா மாத்திரம் கொண்டிருப்பதல்ல, தாங்கள் மனதை மாற்றினால் அது எங்களது தெரிவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அணுவாயுதமழிப்பில் வடகொரியாவின் உறுதிப்பாடு இன்னும் மாறாதிருப்பதாக தெரிவித்த சோ சண் ஹுய், நேரம் வரும்போது அது நடக்கும் எனக் கூறியுள்ளார்.
தமது அணுசக்திகள் சிலவற்றை நிறுத்துவதற்கு பதிலாக பொருளாதாரத் தடைகளை தளர்த்தும் ஒப்பந்தமொன்றை வடகொரியா எதிர்பார்க்கையில், தனது அனைத்து அணு ஆயுதங்களையும் ஐக்கிய அமெரிக்காவிடம் வடகொரியா கையளித்தாலே பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago