2025 மே 05, திங்கட்கிழமை

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் சுட்டுக்கொலை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் வசித்த இந்திய மருத்துவர் ரமேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், ஆந்திரா மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர்.

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த டொக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. இவர் 1986ஆம் ஆண்டு விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் டஸ்கலூசா உள்ளிட்ட நான்கு இடங்களில் பணிபுரிந்தார்.

அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், மருத்துவ சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்டவர் என்பதோடு, தான் வசித்த அலபாமா மாகாணத்தில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் டஸ்கலூசா நகரில், ரமேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். என்ன சம்பவம், கொலைக்கு யார் காரணம் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து புகழ்பெற்றவர் ரமேஷ். கொவிட் காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காத்தவர்; இதற்கென அவருக்கு ஏராளமான விருதுகளும் தரப்பட்டுள்ளன.

மேலும், டொக்டர் தொழிலை சிறப்பாக செய்ததால், டஸ்கலூசாவில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X