Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கிடையே போர்கள் தோன்றாமல் இருக்க அமெரிக்காவின் தலைமையில் பல உலக நாடுகளை உள்ளடக்கி உருவான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பு.
ஐ.நா. சபையின் முக்கிய அங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபை. இதில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இவற்றில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் 5.
2022 பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர் ஞாயிற்றுக்கிழமை (25) 2-வருட காலகட்டத்தை நிறைவு செய்துள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.
இப்பின்னணியில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஞாயிற்றுக்கிழமை (25) ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உரையாற்றினார். அப்போது அவர், “2 வருடங்களாக நடக்கும் இப்போரினால் ஐரோப்பிய மக்களின் இதயத்தில் ஒரு திறந்த, ஆறாத காயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சச்சரவுகள் அமைதியான வழிமுறையிலேயே தீர்க்கப்பட வேண்டும்.
உக்ரேனில் பலர் தங்கள் குழந்தைகளை எப்போது இழந்து விடுவோமோ என அச்சத்திலேயே வாழ்கின்றனர். ரஷ்ய வீரர்களும் இப்போரினால் உயிரிழக்கின்றனர். இரண்டு வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிப்பதை பார்த்து விட்டோம். போதும். சர்வதேச சட்டங்களின்படி அமைதி ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.” என தெரிவித்துள்ளார்.
6 minute ago
7 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
43 minute ago