2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல தடை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச இரகசியங்களை பாதுகாக்கும் பொருட்டு, அரச தொழில் புரியும் ஊழியர்கள் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிச நாடான சீனாவில், அரசு கட்டுப்பாடுகள் அதிகம். அந்நாட்டில், டிவி, சமூக வலைதளம், இணையம் என எல்லாவற்றிலும் அரசின் கண்காணிப்பு இருக்கும்.

அந்தவகையில், அரச இரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், இப்போது அரசு ஊழியர்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அதனடிப்படையில், அரசு அதிகாரிகளுக்கு, இரகசியங்களை பாதுகாக்க பயிற்சி அளித்தல், அரசு இரகசியங்களை கையாளும் ஊழியர்கள், முன் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தல், ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து விலகிய  பிறகும், இரகசிய கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் போன்றவையே அவையாகும்.

மேலும், சில கட்டுப்பாடுகள் ஆயுள் முழுவதும் நீடிக்கும். இதுபோல் இன்னும் சில விடயங்களில் சீன அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X