2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசர் சார்லஸ் - ராணி கமிலா மீது முட்டை வீச்சு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 10 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் அரசர் சார்லஸ் - ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் அரசர் சார்லஸ் மற்றும்  அவரது மனைவி ராணி கமிலா நேற்றைய தினம் (09) அந்நாட்டின் யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தனர்.

இதன்போது அவர்களை வரவேற்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் சார்லஸ் - கமிலா மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். எனினும்  குறித்த முட்டை சார்லஸ் மீது விழாமல் தரையில் விழுந்தது.

இதனை தொடர்ந்து முட்டை வீசி தாக்குதல் நடத்திய 23 வயதான கல்லூரி மாணவனைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அப்போது, அக்கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ‘இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல...’ என்று கூறி மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை.

முட்டை வீசியபோது அந்த நபர் 'அடிமைகளின் ரத்தத்தால் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் இருவரையும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், மன்னர் மீது முட்டைகளை வீசிய இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கூடி இருந்த மக்கள் ‘கடவுளே, மன்னரை காப்பாற்றுங்கள்’ என்று முழக்கமிட்டனர். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்கொட்லாந்தில் உள்ள அரண்மனையில் செப்டம்பர் மாதம் காலமானார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் மன்னரானார். சார்லஸ் இங்கிலாந்தின் மன்னர் ஆனதை பலரும் விரும்பவில்லை.

குறிப்பாக, மன்னர் ஆட்சியை விமர்சிக்கும் போராட்டக்காரர்கள் பலரும் ‘சார்லஸ் எங்கள் மன்னர் அல்லர்’ என்று குரல் எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X