2025 நவம்பர் 05, புதன்கிழமை

அரசாங்கப் போராளிகள் 60 பேர் ஐ.எஸ்-ஆல் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய அரசாங்கப் போராளிகள் 60க்கு மேற்பட்டோரை 48 மணித்தியாலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் கொன்றதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

மத்திய, கிழக்கு சிரியாவில், சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் 35 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் கொன்றதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு வெற்றிகொள்ளப்பட்டதாக கடந்த மாதம் சிரியாவின் கிழக்கு கிராமமான பக்கூஸில் அறிவிக்கப்பட்ட பின்னர் சிரிய அரசாங்கப் படைகள் சந்தித்த மோசமான உயிரிழப்பு இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரியாவின் வடமேற்கு பிராந்தியமான இட்லிப்புக்கு வெளியே சிரியாவின் அல்-கொய்தாவின் முன்னாள் கிளையான ஹயாட் தஹ்ரிர் அல் ஷாமுடன் தொடர்புடைய ஆயுததாரிகளால், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் மீது நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹொம்ஸ் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சிரிய இராணுவ அதிகாரிகள் நால்வர் உட்பட 27 சிரியப் படைகளையும், அவர்களுடன் இணைந்த ஆயுததாரிகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு கொன்றதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளது.

இதுதவிர, கிழக்கு டெய்ர் எஸோரில், எட்டுப் படைவீரர்களையும், ஆயுததாரிகளையும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் கடந்த வியாழக்கிழமை இரவு கொன்றதாகவும் மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலெப்போ நகரின் மேற்கு முனைகளில் ஹயாட் தஹ்ரிர் அல் ஷாமால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான 21 பேர் கொல்லப்பட்டதுடன், சிரியாவின் வடகிழக்கு மகாணமான லடாக்கியாவில் ஹயாட் தஹ்ரிர் அல் ஷாம் நடத்திய தாக்குதலில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் ஐவர் கொல்லப்பட்டிருந்தனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X