Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் தனது முதல் எதிரி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பணிச் செயற்குழு உறுப்பினரான சித்ராமையா தான் என கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ், எச்.டி. குமாரசாமி தலைவராகவுள்ள மதச்சாற்பற்ற ஜனதா தளம், பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) உள்ளிட்ட எக்கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியமையையடுத்து காங்கிரஸ், மதச்சாற்பற்ற ஜனதா தளக் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்திருந்தது. 14 மாதங்களின் பின்னர் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற எச்.டி குமாரசாமி தலைமையிலான அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்து ஆதரவாக 99 சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில், எதிராக 105 சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் கூட்டணி தோல்வியடைந்ததையடுத்து, தனது பதவியை எச்.டி குமாரசாமி இராஜினாமா செய்திருந்தார்.
அந்தவகையிலேயே, “கூட்டணி நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால் இது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த சில முடிவுகளை அவரால் ஏற்க முடியவில்லை. அதனால் சித்தராமையாவுக்கு நான் முதலமைச்சராக நீடிப்பது அவருக்கு பிடிக்காததால் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தொடர்ந்து சதி செய்து வந்தார்” என மேலும் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.
16 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
04 Nov 2025