Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் முழு அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி (67), சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது உடல் வைத்தியசாலையில் இருந்து அம்பியுலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லியின் யமுனைக் கரையில் உள்ள நிகம்போத் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
16 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
04 Nov 2025