Mithuna / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகளின் சபை என இரு அவைகள் உள்ளன. செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி "ரைட் டு டிஸ்கனெக்ட்" (Right to Disconnect) எனும் "தொடர்பு அறுக்கும் உரிமை" குறித்து சட்டம் இயற்றியுள்ளது.
இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் தொலைபேசிகளை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.
இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago