2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

ஆப்கான் நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31)  இரவு 11.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அஞ்சமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே மாவட்டங்களில் குறைந்தது 500 பேர் பலியானதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X