Freelancer / 2026 மார்ச் 17 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் நேற்று திங்கள் கிழமை இரவு நடந்ததாக ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியிலும் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் தங்கள் தரப்பில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் மருத்துவமனையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதை ஆப்கானிஸ்தான் சுகாதார துறையின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் மருத்துவமனை கட்டடம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்தார். (a)

9 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago