2025 மே 14, புதன்கிழமை

ஆபாச பட நடிகைகள் தொடர்ந்து மர்மமாக உயிரிழப்பு

Freelancer   / 2024 மார்ச் 11 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 3 மாதங்களாக, ஆபாச பட நடிகைகள் 4 பேர் மர்மமான முறையில் இறந்த செய்தி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோபியா லியோன். 26 வயதான இவர், தனது 18ஆவது வயதிலிருந்தே ஆபாச திரைப்படங்களில் நடித்துவந்தார். நடிக்கத் தொடங்கிய 9 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலராக உயர்ந்தது.

இந்த நிலையில் லியோன், கடந்த முதலாம் திகதி, நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி பகுதியிலுள்ள அவரது வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சோபியா லியோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய  மூன்று ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தற்போது 4ஆவதாக சோபியா லியோன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், தைனா ஃபீல்ட்ஸ் என்பவர், ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார். அதன் பிறகே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது நடிகை சோபி லியோன் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X