2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆப்கானில் கொல்லப்பட்டோர் எண். 22ஆக உயர்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் (13) மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, 22ஆக உயர்வடைந்துள்ளது என, அந்நாட்டு அதிகாரிகள், நேற்று (14) தெரிவித்தனர். அத்தோடு, மேலும் 36 பேர் காயமடைந்தனர் எனவும், அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வடகிழக்கு மாகாணமான தஸ்கரில், பெண் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தல், எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வன்முறைகளும் அதிகரித்துள்ளன. இதுவரை, 9 வேட்பாளர்கள், தாக்குதல்கள் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X