Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலையமைகத்தை இலக்குவைத்து நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் 6 பேர் காயமடைந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் காபூலில், கடுமையாகப் பாதுகாப்புக்கு உள்ளான பகுதியில், அண்மையில் நடைபெற்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடந்து வந்துகொண்டிருந்த தற்கொலைக் குண்டுதாரி, தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்குவைத்தே, குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதன்போது. பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டதோடு, இரண்டு பொலிஸாரும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் நால்வரும் காயமடைந்தனர்.
57 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago