Editorial / 2018 ஜூலை 02 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நன்கர்மாகாணத்தின் தலைநகரான ஜலலாபாத்தின் மத்தியான முக்காபெராட் சதுக்கத்தில், நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், சிறிய சீக்கிய சிறுபான்மையினத்தவர்கள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்ததாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜலலாபாத்தில் வைத்தியசாலையொன்றை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி திறந்த வைத்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றதாக அதாவுல்லா கொக்யானி தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியான அவ்தார் சிங் கஸ்லா குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அஷ்ரப் கானியைச் சந்திப்பதற்கான பயணமாகிய சீக்கிய சமூக உறுப்பினர்களை காவிய வாகனமொன்றையே தற்கொலைக் குண்டுதாரி இலக்கு வைத்ததாக நன்கர்காரின் பொலிஸ் தலைவர் குலாம் சனயி தெரிவித்தார்.
தனது இணைய அமக் செய்தி முகவரகமூடான அறிக்கையொன்றின் மூலமாக இத்தாக்குதலுக்கான உரிமையை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கோரியபோதும் தமது உரிமை கோரலுக்கான ஆதாரமெதுவையும் சமர்ப்பிக்கவில்லைல்.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 10 பேர் சீக்கியர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அஷ்ரப் கானியின் விஜயத்தை முன்னிட்டு ஜலலாபாத்தின் பெரும்பாலான இடங்கள் முடக்கப்பட்டிருந்திருந்த நிலையில் பாதிப்புகள் குறைவடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முஸ்லிம் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளபோதும் சிறிய எண்ணிக்கையான இந்துக்களும் சீக்கியர்களும் அங்கு இன்னும் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில், சிறிய சீக்கிய, இந்து சமூகங்களுக்காக ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பெரும் எண்ணிக்கையான சீக்கியர்களும் இந்துக்களும் பிரிவினைவாத, தொடர் அச்சத்தால் இந்தியாவுக்கு நகர்ந்துள்ளனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago