Editorial / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகளவு இனிப்பு, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற மோசமான உணவுக் கட்டுப்பாட்டால் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 11 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக லன்செட் மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வொன்று கண்டுபிடித்துள்ளது.
ஆய்வு நடாத்தப்பட்ட 195 நாடுகளில், மோசமான உணவுக் கட்டுப்பாட்டால் அதிகளவு இறப்புகள் ஏற்படும் நாடாக உஸ்பெக்கிஸ்தான் உள்ளதுடன், குறைவான இறப்புகள் ஏற்படும் நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது. பிரித்தானியா 23ஆவது இடத்திலும், ஐக்கிய அமெரிக்கா 43ஆவது இடத்திலும், இந்தியா 118ஆவது இடத்திலும், சீனா 140ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.
அந்தவகையில், ஆரோக்கியமான உணவுகளான கடலைகள், விதைகள், பால், முழுத் தானியங்களை உள்ளெடுத்தலின் சராசரி மிகக் குறைவாக உள்ளதுடன், பல இனிப்புப் பானங்களையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும், உப்பையும் அதிகளவில் உள்ளெடுக்கின்றனர். இதன் காரணமாகவே, 2017ஆம் ஆண்டின் ஐந்திலொரு இறப்புகள், மோசமான உணவுக் கட்டுப்பாட்டுடன் தொடர்புபடுகின்றது.
இதேவேளை, பரிந்துரைக்கப்படும் கடலைகள், விதைகளில் 12 சதவீதமானவற்றையே மக்கள் உள்ளெடுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமுக்குப் பதிலாக சராசரியாக மூன்று கிராம் கடலைகள், விதைகளையே மக்கள் உண்ணுகின்றனர்.
இந்நிலையில், பரிந்துரைக்கப்பட்டதை விட 10 மடங்கு இனிப்பான பானங்களை உள்ளெடுப்பதாக குறித்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நாளொன்றுக்கு உள்ளெடுக்கப்பட வேண்டிய 125 கிராம் முழுத் தானியங்களுக்குப் பதிலாக சராசரியாக 29 கிராம் முழுத் தானியங்களையே மக்கள் உள்ளெடுப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago