Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபிய அரசாங்கத்துக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் மேற்கொள்ளப்படட ஆளில்லா விமானத் தாக்குதலால், அங்கு எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமானிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட 10 ஆளில்லா விமானங்களாலேயே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் இதனால், தினமும் 5.7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ, ஈரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது, ஏமானிலிருந்து நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தலைமையில், மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு பெற்ற இராணுவப் படை, ஏமான் அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது என்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு, ஈரான் ஆதரவளித்து வருகின்றது என்றும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகளுடன் செயல்பட்டு, உலக ஆற்றல் விநியோகம் தடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தான் பொறுப்பு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பெரட்டிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான யாயா சரியாவில் உரையாற்றியுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர், எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்றும் சவுதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும் சவுதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago