Editorial / 2018 மே 23 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதிக்கான பேராயரான பிலிப் வில்சன், சிறுவர் மீதான பாலியல் குற்றங்களை, 1970களில் மூடிமறைத்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக நேற்று (22) இனங்காணப்பட்டார். இதைத் தொடர்ந்து, உலகளாவிய அளவில் சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட உயர்நிலை தேவாலய அதிகாரிகளுள் ஒருவராக, அவர் மாறினார்.
சிறுவர் பாலியல் குற்றவாளியான ஜிம் பிளெற்சர் என்ற பாதிரியாரின் குற்றங்கள் தொடர்பில் முறையிடாது, அவற்றை மூடிமறைத்தார் என்பதே, பேராயர் பிலிப் வில்சன் மீதான குற்றச்சாட்டாகும்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ச்சியாக மறுத்ததோடு, அவர் மீதான வழக்கு விசாரணையைத் தடுப்பதற்கு, அவரது சட்ட அணியால் 4 தடவைகள் முயலப்பட்டது. அவருக்கு, நினைவாற்றல் இழப்பு (அல்சைமர் நோய்) நோய் ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் வழக்கிலிருந்து அவர் விலக்கப்பட வேண்டுமெனவும், அவரது சட்ட அணி கோரியிருந்தது. தேவாலயத்தில், தொடர்ந்தும் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நியூகாசில் உள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது, பாரதூரமான குற்றச்சாட்டொன்றை மறைத்தார் என்பதில், பேராயர் வில்சன் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அவருக்கு, 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். சிறைத்தண்டனை குறித்த விவரங்கள், இன்னொரு நாளில் வெளியிடப்படவுள்ளன.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025