Freelancer / 2023 ஜூன் 18 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் நவம்பர் மாதம் 14-ந் திகதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும்.
எனவே மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம் ஆயிரத்து 171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில், இந்திய வம்சாவளி டொக்டர்கள் தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago