2025 ஜூலை 09, புதன்கிழமை

’இங்கு சென்றால் மனிதர்கள் சாம்பலாகி விடுவார்கள்’

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமியில் சில இடங்களில் வெப்பமும், சில இடங்களில் பனி மூட்டமும் இருக்கும். அண்டார்டிகா போன்ற இடங்களில் வெப்பநிலை மைனஸ்100 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்கிறது. ஆனால் பூமியில் சூரியனின் வெப்பநிலைக்கு சமமான ஒரு இடம் உள்ளது

யாராவது நடந்து சென்றால், அவர் ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகிவிடுவார். எலும்புகள் கூட கிடைக்காது. இதுவரை எந்த நாடும் விஞ்ஞானியும் அங்கு செல்ல முடியவில்லை. பூமியில் இந்த இடத்தின் வெப்பநிலையை அளவிட  மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

பூமியின் மேற்பரப்பில் ஆழமாகச் செல்லும்போது வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்குகிறது என்பதை நாம் அறிவோம். 1992 இல், ரஷ்யா பூமியின் ஆழமான குழியை தோண்ட முயன்றது. ஆனால் 12,200 மீட்டர் ஆழத்தை எட்டிய பிறகு, அங்கு வெப்பநிலை 180 டிகிரி செல்சியஸை எட்டியதால் அகழாய்வை விஞ்ஞானிகள் நிறுத்தினர்.

சயின்ஸ் இதழின் அறிக்கையின்படி, இன்றுவரை சூரியனின் வெப்பநிலையை யாராலும் அளவிட முடியவில்லை. ஆனால் சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படியென்றால் பூமியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடம் உண்டா? என்ற கேள்விக்கு பதில்இருக்கிறது. பூமியின் மையப் பகுதியில் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழக்க நேரிடும். எலும்பின் சாம்பல் கூட மிஞ்சாது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .