2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இசைத் திருவிழா மேடையில் பாரிய தீ பரவல்

Janu   / 2025 ஜூலை 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற டுமாரோலேண்ட் இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை (18) பூம் நகரில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிரதான மேடையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

"தீ பரவலால்  டுமாரோலேண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது," என விழா ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை (16) மாலை ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தீ பரவல் ஏற்பட்டபோது விழாவிற்கு வந்தவர்கள் யாரும் அங்கு இருக்க வில்லை, எனவும் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X