Editorial / 2018 மே 31 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான இடி, மின்னல் தாக்கத்தால், குறைந்தது 50 பேர் பலியாகினர் என, இந்திய அதிகாரிகள் நேற்று முன்தினம் (29) தெரிவித்தனர். அதி வேகமாக வீசிய காற்றுக் காரணமாகவும் மின்னல் தாக்கத்தாலும், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், சுவர்கள் இடிந்து வீழ்ந்தன எனவும், அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக, பீஹார் மாநிலம் அமைந்தது. அங்கு, மின்னல் தாக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 பேர் பலியானதோடு, ஜார்க்கன்ட் மாநிலத்தில், குறைந்தது 12 பேர் பலியாகினர்.
அதேபோன்று, உத்தரகான்ட் மாநிலத்தில், மரம் சரிந்து வீழ்ந்ததில், மூன்று சிறுவர்கள் பலியாகினர்.
இந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி, வட இந்தியாவின் பல பகுதிகளின் வெப்பநிலை, 47 பாகை செல்சியஸை அண்மிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதி வேகமாக வீசும் காற்றும் புயல்களும் ஏற்படக்கூடிய ஆபத்துக் காணப்படுகிறது.
இந்தியாவின் வடபகுதி மாநிலங்களில், அண்மையில் ஏற்பட்ட புழுதிப் புயல் காரணமாக, 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்த நிலையில், தற்போது இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025