Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேற்கு சிரியாவின் எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் பிராந்தியத்தில், வான் தாக்குதல்களில் ஏழு சிறுவர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 18 பேர் நேற்று கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், மேற்கு இட்லிப் மாகாணத்தின் உரும் அல்-ஜவாஸ் கிராமத்தில் வான் தாக்குதல்களால் ஐந்து சிறுவர்கள் உள்ளடங்கலாக 12 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு இட்லிப் மாகாணத்தின் தெற்கிலுள்ள கஃபரூமாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கலாக நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளர்.
இதுதவிர, ரஷ்ய வான் தாக்குதலில் கான் ஷெய்கூன் நகரத்திலுள்ள சிவில் பாதுகாப்பு தன்னார்வலரொருவர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சிரியாவில் பொஸ்பேட்டைக் காவிச் சென்ற ரயிலொன்று, பல்மைராவில் கிழக்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றால் தடம் புரண்டதாகவும், ரயில் பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாக சிரிய அரச ஊடகம் கூறியுள்ளது.
யார் தாக்குதலை மேற்கொண்டனர் என சிரிய அரச ஊடகம் அடையாளப்படுத்தபோதும், அப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு செயற்பாட்டிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago