Editorial / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையொன்றைப் பெறுவதற்கான பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியுடன் பொது இணக்கப்பாடொன்றுக்கு வர நீண்ட காலம் எடுக்கும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் வாய்ப்புகள் குறைவடையும் என பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொழிலாளர் கட்சியின் ஆதரவை வென்றெடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொதுத் தீர்வையொன்றுக்கு வரும் திட்டமொன்றை பிரதமர் தெரேசா மே௶ கொண்டிருப்பதாகவும், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பங்கேற்கும் பிரித்தானிய பிரதிநிதிகளில் தொழிலாளர் கட்சிக்கு இடமொன்று வழங்குவது குறித்து அவரது உதவியாளர்கள் ஆராய்ந்ததாக த சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை இவ்வாண்டு ஜூன் 30ஆம் திகதி வரை ஒத்துவைக்குமாறு ஐரோப்பிய தலைவர்களை பிரதமர் தெரேசா மே கோரியுள்ள நிலையில், கடைசியாக பிரதமர் தெரேசா மே பிரெக்சிற் தாமதத்தைக் கோரும்போது இரண்டு வாரங்கள் வழங்கியிருந்த ஐரோப்பிய ஒன்றியம், அவரது பிரெக்சிற் ஒப்பந்தமானது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்படுவதற்கான திட்டமொன்றை அவர் முதலில் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரித்தானியா பங்கேற்று, இவ்வாண்டு ஜூனைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவத்தை நீடிக்க வேண்டி ஏற்பட்டால் பிரதமர் தெரேசா மேயை பதவிலக்குவோம் என அவரின் பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளதாக ஒப்சேவர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago