Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் ஜெனோவாவில் தகர்ந்த பாலத்தில் உயிர் பிழைத்தோரை தேடும் பணி இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ள நிலையில், குறித்த அனர்த்தத்துக்கு இத்தாலியின் வீதிகளுக்கு பொறுப்பான நிறுவனத்தை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வட துறைமுக நகரான ஜெனோவாவில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து குறித்த பாலத்தின் பெரும்பாலான பகுதி நேற்று முன்தினம் வளைந்திருந்த நிலையில், 35 கார்களும் சில ட்ரக்குகளும் 45 மீற்றர் உயரத்திலிருந்து ரயில் தண்டவாளங்களின் மீது வீழ்ந்திருந்தன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 8, 12, 13 வயதான சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த உட்துறை அமைச்சர் மட்டியோ சல்வினி, மேலும் பலரை இன்னும் காணவில்லை எனக் கூறியுள்ளனர்.
இதேவேளை, குறித்த பாலத்துக்கு பொறுப்பான அட்லாண்டியாவால் நிர்வகிக்கபடும் தனியார் நிறுவனமாக ஒட்டோஸ்ரேட் பேர் இத்தாலியா நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், 150 மில்லியன் யூரோக்கள் அபராதத்தையும் விதித்துள்ளது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த இத்தாலிய பிரதிப் பிரதமர் லூயுஜி டி மையோ, இந்த இடர் தவிர்க்கப்பட்டிருக்கலாமெனவும் குறித்த நிறுவனம் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டுமென்றும் ஆனால் அது மேற்கொள்ளவில்லையென்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, முழுமையான மீட்புப் பணியை மேற்கொள்ள சில நாட்களாகும் என்ற நிலையில், கவலைக்கிடமாகவுள்ள 11 பேர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago