Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 12 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.
இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமரும் அங்குள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86 வயதில் காலமானார்.
ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் ஒன்றான இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இருப்பினும் பிரதமராக இருந்த போது அவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கியவர்
ஒரு காலத்தில் தன்னை இயேசுவோடு கூட ஒப்பிட்டுக் கொண்ட நபர்.. இவருக்கு லுகேமியா பாதிப்பு இருந்த போதிலும், கடைசி வரை எம்பியாக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இருப்பினும், சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் இவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை.
அவர் மீது பெரும்பாலான காலம் நீதிமன்றத்தில் எதாவது ஒரு வழக்கு நடந்து கொண்டே தான் இருக்கும். அந்தளவுக்குச் சர்ச்சைக்கு மத்தியிலேயே இருந்தார். குறிப்பாக அவரது மோசமான "புங்கா புங்கா" செக்ஸ் பார்ட்டி சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. அதில் 18 வயதுக்குக் குறைவான பெண்களும் கூட கலந்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அவர் இப்போது 33 வயது காதலி மார்டா ஃபாசினா என்பவருடன் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு முன்னாள் மனைவிகள் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலர் தான் இப்போது அவரது பிஸ்னசை பார்த்துக் கொள்கிறார்கள்.
உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே பொது வாழ்க்கையில் இருந்து சில்வியோ பெர்லுஸ்கோனி ஒதுங்கியே இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று (12) தனது 86 வயதில் காலமானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago