2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் மே 4 ஆம் திகதி முதல் உற்பத்தி, கட்டுமான மற்றும் மொத்த விற்பனை கடைகள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும் என, அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.

இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 26,644 பேர் பலியாகியுள்ளனர். 1.97 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,928 பேர் குணமடைந்துள்ளனர். 

இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு மார்ச்.14 முதல் நேற்று (26) தான் குறைந்தபட்சமாக 260 ஆக பதிவாகி இருந்தது. 

இந்தநிலையில், மே 4 முதல் முகக்கவசம் அணிந்து மக்கள், தங்களது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் திறக்கப்படும். 

மக்கள் தங்கள் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் ஜாக்கிங் அல்லது பைக் ரைடிங் செல்லலாம். அதனை தொடர்ந்து மே 18 முதல் சில்லறை விற்பனை கடைகள், மியூசியம், நூலகம் உள்ளிட்டவையும், ஜூன் 1 முதல் பார்கள் , உணவகங்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் செயல்பட ஆரம்பிக்கும் என, கோண்டே அறிவித்துள்ளார்.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றி அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். 

அனைத்து வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக, சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்றின் விலையாக 50 யூரோ செண்ட்ஸ் நிர்ணயம் செய்துள்ளது. 

வணிக நிறுவனங்களுக்கு சலுகை மற்றும் இரண்டாவது ஊரடங்கில் சுற்றுலா செயல்பட ஆரம்பிக்கும் என, தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X