2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் கந்தகார் மற்றும் ஹெராட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களைத் தலிபான்கள் சூறையாடியுள்ளதாக, இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூடப்பட்டிருந்த தூதரகங்களுக்குள் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்று தெரிவித்துள்ள இது இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி தலிபான்கள் செயற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது எனவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தூதரகம் மூடப்படுவதை விரும்பவில்லை என்றும், அங்கு பணியாற்றுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கட்டாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தூதரகங்கள் சூறையாடப்பட்டமைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .