Editorial / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் - கராச்சியை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஆயிஷா ரஷான் அவர், மாரடைப்பால் அவதியுற்று நீண்ட நாட்களாக வந்துள்ளார்.
அவருடைய உடல்நிலை சீராக இல்லாமையால், விரைவில் இதய மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு 35 இலட்சம் ரூபாய் செலவாகும். எனினும், ஆயிஷாவின் தாயால் அந்த செலவை ஈடு செய்ய முடியவில்லை.
மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் , அவளைக் காப்பாற்றும் முயற்சியின் ஓர் அங்கமாக , இரத்தத்தைப் பாய்ச்ச உதவும் இடது வென்ட்ரிக்குலர் (ventricular) சாதனத்தை வைத்தியர்கள் பொருத்தினர். அந்த முயற்சியும் கைகூடவில்லை.
இறுதியாக , ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தினர். ஆயிஷாவுக்கு சிகிச்சையை மேற்கொள்ள இந்தியா பயணமாகினர்.
இந்தியாவின் சுகாதார விதிமுறைகளின் படி, வெளிநாட்டுப் பிரஜையொருவருக்கு தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளைப் பெறுவது கடினமாகும்.
எதிர்பாராத விதமாக ஆயிஷாவுக்கு மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக புதுடெல்லியைச் சேர்ந்த ஒருவரின் இதயம் கிடைக்கப்பெற்றது. 69 வயதான உயிரிழந்த இந்தியர் ஒருவரின் இதயம் அது.
மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளியிடமிருந்து பெறப்பட்ட இதயத்தைக் கொண்டு இந்திய வைத்தியர்கள் ஆயிஷாவுக்கு இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். மேலும், சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் ஆயிஷாவுக்கு தேவையான நிதியுதவியை வழங்கியது.
ஆயிஷாவுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,
''அவள் சிறு குழந்தை , அவள் என்னுடைய மகள் போன்றவள். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. உலகிலுள்ள அனைவரின் வாழ்க்கையையும் எம்மால் மாற்ற முடியாது. ஆனால், எம்மை நாடி வருபவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும்.''
ஆயிஷாவும் அவருடைய குடும்பத்தினரும் மருத்துவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். இந்தியரின் இதயத்துடன் ஆயிஷா இன்று நலமாக இருக்கின்றாள்.
8 minute ago
27 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
54 minute ago