2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இந்தியர்களுக்காகப் போரை நிறுத்தும் ரஷ்யா

Ilango Bharathy   / 2022 மார்ச் 08 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 13 ஆவது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல் உக்ரேனும்  தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

குறிப்பாக உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வடகிழக்கு நகரமான சுமி ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதனால் அந்நகரங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் உக்ரேனியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

இதனையடுது்து சுமி நகரில்  உள்ளவர்கள் அந்நகரை விட்டு வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரேன் மற்றும் ரஷ்யா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது.

இந் நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் உள்ளவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில்

போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா நேற்றைய தினம்  (7) அறிவித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .