Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 02 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செர்பியாவின் தபால் துறை சிறப்பு தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது.
செர்பியாவின் முதல் பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஐவிகா டாசிக் முன்னிலையில் சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டதாக செர்பியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான "நெருக்கமான உறவை" அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று செர்பியாவில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
எமது சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவான ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்வை முன்னிட்டு செர்பியா தபால் துறை விசேட தபால் முத்திரையை வெளியிட்டதாக செர்பியாவில் உள்ள இந்திய தூதரகம் டுவிட் பதிவிட்டுள்ளது.
75 ஆண்டு சுதந்திரம் மற்றும் தேசத்தின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் குறிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் முயற்சியைத் தொடங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க வகையில், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் அதிகாரப்பூர்வ பயணம் மார்ச் 12 அன்று தொடங்கியது, இது சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுக்கான 75 வார கவுண்ட்டவுனைத் தொடங்கியதுடன், 2023 ஓகஸ்ட் 15 அன்று முடிவடையும்.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு தபால் முத்திரையை வெளியிடுவதாக செர்பியாவின் வெளியுறவு அமைச்சு டுவிட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் 75 ஆண்டு இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் என்று செர்பியாவின் வெளியுறவு அமைச்சர் ஐவிகா டாசிக் வலியுறுத்தினார்.
இந்தியாவும் செர்பியாவும் அணிசேரா இயக்கம் நிறுவப்பட்டபோது நிறுவப்பட்ட நெருங்கிய உறவுகளின் அடிப்படையில் பாரம்பரியமாக "மிகவும் நல்ல மற்றும் நட்புறவை" கொண்டுள்ளன என்று செர்பியாவின் வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், அரசியல் உரையாடலை வலுப்படுத்துவதிலும், கொள்கைப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் பரஸ்பர ஆர்வமுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செர்பியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தற்போது பெரும்பாலும் வர்த்தக பரிமாற்றம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இது 2021 ஆம் ஆண்டில் 216.56 மில்லியன் யூரோக்கள் மதிப்புடையது என்பதுடன், செர்பிய ஏற்றுமதிகள் 22.40 மில்லியன் யூரோக்கள் மற்றும் இந்தியாவில் இருந்து 194.16 மில்லியன் யூரோக்கள் இறக்குமதிகள் என்று செர்பிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2022 ஜனவரி முதல் மே வரை, செர்பியா இந்தியாவுக்கு 8.21 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, மேலும் இந்தியாவிலிருந்து செர்பியாவுக்கு மொத்தம் 107.71 மில்லியன் யூரோக்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago