2026 ஜனவரி 28, புதன்கிழமை

இந்தோனேசியா பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியா சுமத்ரா தீவில் சீரற்ற வானிலை மற்றும் 'சென்யார்' புயலால் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் போனவர்களின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.

மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து காணாமலையை கொடுத்தது.

இந்தோனேசியாவில் 'சென்யார்' புயலால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன்,  சுமார் 75,219 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

புயல் காரணமாக தாய்லாந்து நாட்டின் 14 மாகாணங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X