2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

இந்தோனேஷியா அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து;17 பேர் பலி

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். 7 மாடி கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதால் வானத்தில் அடந்த கரும்புகை எழுந்தது. இந்த கரும்புகை எழும்பியதை பார்த்த அப்பகுதியில் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X