Editorial / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவை ஏற்கெனவே தாக்கிய இயற்கை அனர்த்தம் தொடர்பான வடுக்கள் ஆற முன்னர், மீண்டுமோர் இயற்கை அனர்த்தம் தாக்கியுள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு ஆகியன காரணமாக, குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதோடு, 15 பேரை இன்னமும் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது.
சுமாத்ரா தீவின் வடக்கு, மேற்குப் பகுதிகளிலுள்ள, 500க்கும் மேற்பட்ட வீடுகள், இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வீடுகள், வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றுள்ளன. அதேபோல், குறைந்தது 3 பாலங்கள் உடைந்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கியோரைக் காப்பதற்கும், அவர்களைத் தேடுவதற்குமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்த, இந்தோனேஷியாவின் அனர்த்தக் கட்டுப்பாட்டு முகவராண்மையின் பேச்சாளர் ஒருவர், எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகள், மலைகளில் இருப்பதால், அவற்றை அடைவதில் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வெள்ளத்தில் உயிரிழந்த 21 பேரில், இஸ்லாமியக் கிராமப் பாடசாலையொன்றில் கல்விகற்றுக் கொண்டிருந்த 11 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் என அறிவிக்கப்படுகிறது. அவர்கள் கற்றுவந்த வகுப்பறையின் சுவர் இடிந்து வீழ்ந்தே, இவர்கள் பலியாகினர்.
ஏற்கெனவே, இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, சுனாமி ஆகியவற்றால், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். அவ்வனர்த்தம் இடம்பெற்றுச் சில வாரங்களில், அடுத்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
41 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago