Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) தனது ஒப்பந்தத்தில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பினுடன் இணங்குவதற்காக இன்னொரு பிரெக்சிற் தாமதத்தை எதிர்பார்ப்பதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிற்றின் நெருக்கடியை முறியடிப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியொன்றாகவே மேற்குறித்தத்தை பிரதமர் தெரேசா மே மேற்கொள்கையில், இது அவரது கன்சவேர்ட்டிவ் கட்சியிலுள்ள பலரைப் பாதிக்கும் எனத் தெரிகிறது.
அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னர் வாக்களித்திருந்த பிரித்தானியா, தான் முதலில் 1973ஆம் ஆண்டு இணைந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எப்போது அல்லது வெளியேறுமா என்பது தெளிவில்லாமல் உள்ளது.
எவ்வாறு நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து தனது தலைமையில் ஏழு மணித்தியாலங்களாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், இம்மாதம் 12ஆம் திகதியைத் தாண்டி இன்னொரு குறுகிய பிரெக்சிற் தாமதத்தை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், பிரதமர் தெரேசா மேயின் குறித்த நகர்வு மூலம் பிரெக்சிற்றைத் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிக நெருங்கியதொரு பொருளாதார இணைப்பில் பிரித்தானியாவை வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும், அவரது கன்சவேர்ட்டிவ் கட்சியின் அரைவாசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உறுதியாக பிரிவை எதிர்பார்க்கையில், அக்கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள ஜெர்மி கோர்பின், பிரதமர் தெரேசா மேயைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், தான் பேச்சுக்களில் எல்லையை நிர்ணயிக்கமாட்டேன் எனத் தெரிவித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொதுவான தீர்வை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையில் வகிபாகம், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆகிய தனது கட்சியின் கோரிக்கைகளை மீண்டு வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், எந்தவொரு ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறத் தவறினால், அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்துவேன் என ஜெர்மி கோர்பின் மேலும் தெரிவித்துள்ளார்
19 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
1 hours ago