2025 மே 09, வெள்ளிக்கிழமை

இம்ரான்கானின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதற்கிடையே தோஷகானா வழக்கில் ஓகஸ்ட்  5 ஆம் திகதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

 இந்நிலையில் தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி  ஓக்டோபர் மாதம் 10-ந் திகதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X