Editorial / 2019 மே 02 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நிய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான இம்மாதம் 23ஆம் திகதிக்கு பிறகு, நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே நாளான நேற்று (01), தூத்துக்குடியில் பேரணியாகச் சென்று சிதம்பர நகர் பஸ் நிலையம் அருகே இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி கருத்தை மு.க. ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த மு.க. ஸ்டாலின், “மத்திய, மாநில அளவில் இருக்கக்கூடிய அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் உரிமைகள் எந்தளவுக்கு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, விவசாயிகளின் கோரிக்கைகள் எந்தளவுக்கு நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை தயவு செய்து நீங்கள் எல்லோரும் மறந்து விடக்கூடாது. உரிமைக்காக தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று போராடக்கூடிய விவசாயிகளாக இருந்தாலும், தொழிலாளர்களால் இருந்தாலும் இன்றைக்கும் இந்த இரண்டு ஆட்சிகளில் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
உரிமைக்காக போராடுகின்றபோது இந்த ஆட்சியின் தடியடி பிரயோகத்துக்கு ஆளாகுகின்றார்கள். சிறையில் அடைக்கப்படக்கூடிய கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், இங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி, போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் இந்த நாட்டின் தலைநகரமான புதுடெல்லிக்குச் சென்று போராடக்கூடிய அந்தச்சூழ்நிலை வந்தபோதும் கூட இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி, ஒரு ஆறுதலுக்காக கூட அவர்களை அழைத்து இரண்டு நிமிடம் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றேன், பரிசீலிக்கின்றேன், பார்க்கலாம் என்று கூட சொல்ல முடியாத ஒரு பிரதமராக இருக்கின்றார்” எனக் கூறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago